திஸ்ஸ குட்டியாரச்சிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எச்சரிக்கை!
பொதுக் கூட்டங்களில் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சிக்கு கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் தெரிவிக்கப்பட்ட திஸ்ஸ குட்டியாரச்சியின் சர்ச்சைக்குரிய கருத்து, கட்சி உறுப்பினர்கள் மத்தியில் கணிசமான கவலையை ஏற்படுத்தியுள்ளதாக பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இது கட்சித் தலைமைக்கு கடுமையான கண்டனத்தை வெளியிடத் தூண்டியுள்ளதாக பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
மிஹிந்தலை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில், 2029 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாகும் நாளில் தான் அதிகாரப்பூர்வமற்ற ஜனாதிபதியாக இருப்பேன் என்று குட்டியாராச்சி கூறினார்.
இந்தக் கூற்று சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த பின்னணியில், கட்சியின் பொதுச் செயலாளர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
