பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வலியுறுத்தி இத்தாலியில் போராட்டம்

 

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

இருப்பினும், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்க மறுத்துள்ளார்.

இதன்படி பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க மாட்டோம் என மெலோனி அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில் இதற்கு எதிராக இத்தாலி முழுவதும் பாலஸ்தீன ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை பிரயோசத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் போராட்டத்தின் போது 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.