மஸ்கெலியா, கங்கேவத்த த.வி பாடசாலையின் பழைய மாணவன் கிருஸ்ணராஜா இலங்கை இரானுவத்தில் சிறப்பு தேர்ச்சி

-மஸ்கெலியா நிருபர்-

கங்கேவத்த த.வி பாடசாலையின் பழைய மாணவரும், ராஜரட்ணம், ஸ்ரீதேவியின் புதல்வருமான கிருஸ்ணராஜா இலங்கை இரானுவத்தின் இரண்டாவது மிகப்பெரிய படையணியான பீரங்கி படை அணியின் 10 ஆவது படைப்பிரிவிற்கு தேர்ச்சிப்பெற்றுள்ளார்.

கங்கேவத்த த.வி இல் தரம் 1 தொடக்கம் 11 வரை கல்வி கற்று, புலமைப்பரிசில் பரீட்டையில் சித்தி பெற்றது மாத்திரமன்றி, க.பொ.த சா.தரப் பரீட்சையில் சிறந்த சித்திப்பெற்று உயர் தரத்திற்கும் தேர்வாகியிருந்தார்.

தொடர்ந்து இலங்கை நாட்டின் பாதுகாப்பு பிரிவில் இனைந்து பணியாற்றுவதை இலட்சியமாகக் கொண்டு, தெய்யத்தகண்டி ஹேனானிகல இரானுவ சிறப்பு பயிற்சி முகாமில் 6 மாதகால பயிற்சியினை அன்மையில் பூர்த்தி செய்து இலங்கை இரானுவத்தின் பீரங்கிப் படையில் இனைந்துக்கொண்டுள்ளார்.