நீண்ட நாட்களுக்குப் பின் ட்ரம்ப் – மஸ்க் சந்திப்பு

நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்றிரவு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் சந்தித்துள்ளனர்.

சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளர் சார்லி கிர்க்கிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வின் போது இருவரும் சந்தித்து உரையாடியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் இருவருக்குள்ளும் மீண்டும் நட்பு துளிர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க அரசங்கம் கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதா காரணமாக குறித்த இருவருக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது.

அதன் பின்னர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்