இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

கடந்த வெள்ளிக்கிழமை 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 298,000 ரூபாயாக விற்கப்பட்ட நிலையில், இன்று திங்கட்கிழமை தங்கம் பவுண் ஒன்றுக்கு 1000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 299,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 276,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 34,575 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.