வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட சடலங்களும் போதைப்பொருட்களும் : பொலிஸார் வெளியிட்ட மேலதிக தகவல்கள்!
தங்காலையில் லொறி ஒன்றில் இருந்து சுமார் 200 கிலோ போதைப்பொருட்கள், கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ICE) மற்றும் ஹெரோயின் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தங்காலை சீனிமோதரவில் உள்ள ஒரு வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த லொறியில் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன, அத்துடன் அந்த வீட்டிலிருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டன.
விஷம் குடித்த நிலையில் அந்த வீட்டிலிருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் சடலமாக மீட்கப்பட்டவர்களுடன் ஒன்றாக இருந்து மது அருந்தியதாக உயிரிழந்தவரின் குழந்தை தெரிவித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில், சடலங்களுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட போதைப்பொருட்கள் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ICE) என சந்தேகிக்கப்படுகிறது.
பொலிஸாரின் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
