பயணிகளுக்கு முதலுதவி வழங்குவது குறித்து பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு பயிற்சி
-மஸ்கெலியா நிருபர்.
மஸ்கெலியா பகுதியில் உள்ள தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு விபத்து அல்லது பேரிடர் ஏற்பட்டால் சரியான முதலுதவி அளித்தல் மற்றும் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாத வகையில் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வது குறித்து நடைமுறை பயிற்சி திட்டம் மஸ்கெலியா பி.எம்.டி கலாச்சார மண்டபத்தில் நடத்தப்பட்டது.
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் நுவரெலியா மாவட்ட கிளையின் நிர்வாக அதிகாரி திரு. சமன் சந்திரசிறி ஏற்பாடு செய்து நிதியுதவி அளித்த இந்த நிகழ்ச்சியில் மஸ்கெலியா பகுதியில் உள்ள தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளில் பணிபுரியும் சுமார் 50 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பங்கேற்றனர்.