நெல் சந்தைப்படுத்தல் சபை நெல் கொள்முதல் தொடர்பில் அறிவிப்பு
விவசாயிகளிடமிருந்து இதுவரை சுமார் 50 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல் சந்தைப்படுத்தல் சபையால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடுகளுக்காக, 6 ஆயிரம் மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகநெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
அவசியம் ஏற்படும் நிலையில், மேலும் நெல்லை கொள்வனவு செய்ய தயாரென நெல் சந்தைப்படுத்தல் சபையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார் .
இந்நிலையில், விவசாயிகளிடமிருந்து நாட்டு நெல் கிலோவுக்கு 120 ரூபாய்க்கும், சம்பா நெல் கிலோவுக்கு 125 ரூபாய்க்கும், கீரி சம்பா நெல் கிலோவுக்கு 132 ரூபாய்க்கும் நெல் சந்தைப்படுத்தல் சபையால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
