மண்முனை பிரதேச சபையின் ஏற்பாட்டில் பாலர்களுக்கான விளையாட்டுப் போட்டி

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு “மனநிறைவான தருணங்கள்” என்ற தொனிப்பொருளில் மண்முனை பிரதேச சபை ஏற்பாடு செய்த பாலர் பாடசாலை சிறார்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் ஆரையம்பதி நந்தகோபன் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றன.

மண்முனை பிரதேச சபை தவிசாளர் செந்தில் குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பல பாலர் பாடசாலைகளின் சிறுவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

வாத்துநடை, முயலோட்டம், போத்தலில் நீர் நிரப்புதல், மரக்கறி அடையாளமிடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் சிறுவர்களின் உற்சாக பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டன. போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் மண்முனைபற்று பிரதேச சபை பிரதித் தவிசாளர் இ. முத்துக்குமார், சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.