இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையைத் தீவிரப்படுத்த தீர்மானம்
இலங்கை மின்சாரசபை பொறியியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட மின்சார சபையின் பல்வேறு தொழில் சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் தமது தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளன.
கடந்த 4 ஆம் திகதி முதல் ‘சட்டப்படி வேலை’ போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் ‘சுகயீன போராட்டம்’ முன்னெடுக்கப்பட்டது.
தொடர்ச்சியாக, கடந்த 17 நாள்களாக மேற்கொள்ளப்பட்டுவரும் எதிர்ப்பு தொழிற்சங்கப் போராட்டங்கள் தொடர்பில் மின்சார சபையின் சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கையை முன்னெடுப்பதற்குத் தவறியுள்ளதாக மின்சாரசபை தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இலங்கை மின்சாரசபை மறுசீரமைப்பு திட்டத்துக்கு எதிராக தொழிற்சங்கப் போராட்டத்தை மேலும் முன்னெடுப்பது அவசியம் என மின்சாரசபை தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
