மஸ்கெலியா புரவுன்சீக் தோட்ட புளூம்பீல்ட் தேசிய பாடசாலைக்கு சுத்தமான குடிநீர் வழங்கல்

-மஸ்கெலியா நிருபர்-
கடந்த ஒரு நூற்றாண்டு காலம் சுத்தமான குடிநீர் இல்லாமல் இயங்கி வரும் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புளூம்பீல்ட் தேசிய பாடசாலைக்கு சுத்தமான குடிநீர் பெற்று கொடுக்க சமூக செயற்பாட்டாளர் தேவ சுந்தரம் தேவா முன் வந்து உள்ளார்.

வித்தியாலய அதிபர் கே.ஜோதிநாதன் வேண்டுகோளுக்கு இணங்க சுமார் 1200 க்கு மேற்பட்ட தரம் ஒன்று முதல் உயர் தரம் வரை கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் அங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர் நலன் கருதி சுத்தமான குடிநீர் பெற்று கொடுக்க சுமார் நான்கு லட்சம் ரூபாய் செலவில் கட்டுமான பணி நேற்று சனிக்கிழமை காலை ஆரம்பிக்க பட்டு அதற்கான சீ மேந்து குழாய்கள் (சிலிண்டர்கள்) கொண்டு வரப் பட்டு உள்ளது.

கட்டுமான பணி சுமார் ஒரு மாத காலத்தில் இப் பணி நிறைவு பெறும் அதன் பின்னர் இப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுத்தமான குடிநீர் பெற்று கொள்ள முடியும் என சமூக செயற்பாட்டாளர் தேவ சுந்தரம் தேவா தெரிவித்தார்.

மஸ்கெலியா புரவுன்சீக் தோட்ட புளூம்பீல்ட் தேசிய பாடசாலைக்கு சுத்தமான குடிநீர் வழங்கல்
மஸ்கெலியா புரவுன்சீக் தோட்ட புளூம்பீல்ட் தேசிய பாடசாலைக்கு சுத்தமான குடிநீர் வழங்கல்