திருகோணமலையில் 300 க்கும் மேற்பட்டோரை கௌரவிக்கும் நிகழ்வு

-மூதூர் நிருபர்-

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சாதனை மாணவர்கள், சமூக சேவையாளர்கள் என பல்துறை சார்ந்தோரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மூதூர் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

மூதூர் திடீர் மரண விசாரண அதிகாரியும் , அனர்த்த சமூக சேவைகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவருமான யூசூப் லாபீர் அவர்களின் ஏற்பாட்டிலும், அவரது தலைமையிலும் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த க.பொ.த சாதாரதரப் பரீட்சையில் 9ஏ பெற்ற மாணவர்கள், அல்குர்ஆனை மனனம் செய்த மாணவர்கள், 5 ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவான உறுப்பினர்கள், சமூக சேவையாளர்கள் என சுமார் 300 க்கு. மேற்பட்டோர் இதன்போது நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது மாணவர்கள்களின் கலை நிகழ்வுளும் இடம்பெற்றன.

நிகழ்வில் முதன்மை விருந்தினராக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கலந்து சிறப்பித்தார்.