மஸ்கெலியா பிரதேச சபையின் உள்ளூராட்சி வாரத்தின் இறுதி நாள் வைபவத்தில் பரிசளிப்பு

-மஸ்கெலியா நிருபர்-

பிரதேச சபையின் உள்ளூராட்சி வாரத்தின் இறுதி நாள் வைபவத்தில் பரிசளிப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தலைமையில் டி.எம்.டி மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஸ்னண் கலைச்செல்வி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மஸ்கெலியா பொலிஸ் சந்தியில் பிரதம அதிதியாக கந்தையா இராஜ்குமார் பொன்னாடை போர்த்தி வரவேற்றார் நிகழ்வில் உப தவிசாளர் பல.ராஜ் அசோக் மற்றும் பிரதேச சபையின் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் அதன் செயலாளர் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார கலந்து கொண்டனர்.

முதல் அம்சமாக வீதி பெயர் பலகையை நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கிருஷ்ணன் கலைச்செல்வி திறந்து வைத்தார்.தொடந்து வாராந்த ஞாயிறு சந்தையை நாடா வெட்டி அதே பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினரை மஸ்கெலியா டி.எம்.டி மண்டபத்திற்கு தவிசாலர் மற்றும் உறுப்பினர்கள் செயலாளர் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் அழைத்து வரப்பட்டார்.

தேசிய கீதம் மற்றும் பிரதேச சபையின் கீதம் இடம் பெற்று தவிசாளர் கந்தையா இராஜ்குமார் வரவேற்பு உரையுடன் மஸ்கெலியா பிரதேச சபையின் குறைபாடுகள் பற்றி விரிவாக எடுத்து கூறுகின்றனர் தொடர்ந்து மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து பிரதம அதிதியான நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கிருஷ்ணன் கலைச்செல்வி அவர்கள் உரை இடம் பெற்றது.

அவரது உரையில் மஸ்கெலியா பிரதேச சபை ஒரு சுயாதீன சபையாக இயங்கி வருவதை இட்டு மண மகிழ்ச்சி அடைகிறேன் இந்த சபையில் கட்சி பேதமின்றி நிற பேதமின்றி செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன இதேபோல் செயற் படும் பட்சத்தில் எனது காலப் பகுதியில் நாட்டின் தலைவர் அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு ஏனைய அமைச்சர்கள் ஊடாக மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் அபிவிருத்திக்கு என்னால் ஆன முழு உதவி செய்வேன் என்று கூறினார்.

இறுதியில் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்கள் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

மஸ்கெலியா பிரதேச சபையின் உள்ளூராட்சி வாரத்தின் இறுதி நாள் வைபவத்தில் பரிசளிப்பு
மஸ்கெலியா பிரதேச சபையின் உள்ளூராட்சி வாரத்தின் இறுதி நாள் வைபவத்தில் பரிசளிப்பு