உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு மஸ்கெலியா நகரில் உள்ள வீதிகளுக்கு பெயர் சூடல்
-மஸ்கெலியா நிருபர்-
மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தலைமையில் உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு மஸ்கெலியா நகரில் உள்ள அனைத்து வீதிகளுக்கும் பெயர் பலகை நாட்டும் வைபவம் இன்று ஞாயிற்றுக்கிழமை வைபவ ரீதியாக இடம் பெற்றது.
நிகழ்வில் மஸ்கெலியா பிரதேச சபையின் உதவி தவிசாளர் செயலாளர் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் நகர வர்த்தகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மஸ்கெலியா நகரில் உள்ள 7 ம் வீதிக்கு பெயர் பலகை நாட்டும் வைபவம் இடம் பெற்றது.
ஏனைய சகல வீதிகளுக்கு பெயர் பலகைகள் நாட்ட ஏற்பாடு செய்ய பட்டுள்ளது.




