குளவி கொட்டுக்கு இலக்காகி 14 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

-மஸ்கெலியா நிருபர்-

பொகவந்தலாவ கொட்டியாகல தோட்ட கொட்டியாகல பிரிவில் இன்று சனிக்கிழமை நண்பகல் தேயிலை கொழுந்து பறித்து கொண்டு இருந்த வேளையில் தேயிலை செடியின் கீழ் பகுதியில் இருந்த குளவி கூடு கலைந்து தேயிலை கொழுந்து பறித்து கொண்டு இருந்த தொழிலாளர்களை கொட்டியுள்ளது.

குளவி கொட்டுக்கு இலக்கான 14 தொழிலாளர்களும் பொகவந்தலாவ மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கானவர்களில் 12 பேர் பெண்கள் 2 பேர் ஆண்கள் எனவும் இவர்கள் 35 வயது தொடக்கம் 53 வயது உடையவர்கள் எனவும் வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொகவந்தலாவ பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.