பொகவந்தலாவயில் பயனுள்ள சேவைகளை வழங்கும் “நடமாடும் சேவை”

-மஸ்கெலியா நிருபர்-

தோட்ட மக்களுக்கு பயனுள்ள சேவைகளை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை நேற்று வெள்ளிக்கிழமை பொகவந்தலாவ பெருந்தோட்ட விளையாட்டுக் கழக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த நடமாடும் சேவையை நோர்வூட் பிரதேச செயலகம் மற்றும் இலங்கை தேசிய சமாதான அமைதிப் பேரவையின் நுவரெலியா மாவட்ட சர்வமத குழு ஏற்பாடு செய்திருந்தன.

இங்கு பிறப்புச் சான்றிதழ்கள், தேசிய அடையாள அட்டைகள், திருமணச் சான்றிதழ்கள், இறப்புச் சான்றிதழ்கள் வழங்குவதற்கான அடிப்படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன, அஸ்வெசும பயனாளிகளுக்கான அடிப்படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன, மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

நோர்வூட் பிரதேச செயலக அதிகாரிகள், பொகவந்தலாவ காவல்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசு நிறுவனங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்று இந்த நடமாடும் சேலையை நடத்தினார்கள்.

சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட பயனாளிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.