மூதூர் பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி

-மூதூர் நிருபர்-

தேசிய உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு “மறுமலர்ச்சி நகரம்” வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை, மூதூர் பிரதேச பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி இன்று வெள்ளிக்கிழமை இவ் போட்டி இடம்பெற்றது.

மூதூர் பிரதேச சபையின் ஏற்பாட்டில் அதன் தவிசாளர் எஸ்.பிரகலாதன் தலைமையில் இவ் கட்டுரைப்போட்டி நடைபெற்றது.

இதில் அதிகளவான பாடசாலை மாணவர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.