ரோஹித அபேகுணவர்தனவிடம் வாக்குமூலம் பெற உத்தரவு

நிதி மோசடியுடன் தொடர்புடைய வழக்கு தொடர்பில் , பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவிடம் வாக்குமூலம் பெற்று இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு கடுவெல நீதிவான் நீதிமன்றம் நேற்று (17) உத்தரவிட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிக்கும் போது, ​​அவர் அமைச்சராக இருந்த காலத்தில் நிதி மோசடி நடந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.