ஹர்ஷனி சந்தருவானி பிணையில் விடுவிக்கப்பட்டார்!
கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டை மாநகர சபையின் உறுப்பினர் ஹர்ஷனி சந்தருவானி நேற்று புதன்கிழமை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த ஆகஸ்ட் 22 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதுஇ நீதிமன்ற நடவடிக்கைகளின் போது நீதித்துறை மற்றும் அதன் தீர்ப்புகளுக்கு எதிராக அவமதிப்பு கருத்துக்கள் தெரிவித்ததற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணைகளின் விளைவாக 46 வயதான ஹர்ஷனி சந்தருவானி கைது செய்யப்பட்டார்.
