களுவாஞ்சிக்குடியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிசுக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைப்பு

பெரண்டினா லயிப் லைன் வேலைத்திட்டத்தின் கீழ் களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிசுக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய  பொதிகள் இன்று வியாழக்கிழமை களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது.

பெரண்டினா மைக்ரோ நிறுவனத்தின் வலய முகாமையாளர் பிரதிலிபன் , களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் உதயசூரி , மற்றும் களுவாஞ்சிக்குடி பொதுச் சுகாதார பரிசோதகர் யோகேஸ்வரன் ,என பல அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்

இதன் போது தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சிசுக்களுக்கான அத்தியாவசிய பட்டியல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.