கடலில் மூழ்கிய ஆஸ்திரிய சுற்றுலாப் பயணி பாதுகாப்பாக மீட்பு!
மிரிஸ்ஸ கடலில் குளிக்கும்போது, நீரில் மூழ்கி தத்தளித்த 28 வயது வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர், பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை மதியம் மிரிஸ்ஸ கடலில் நீந்திக் கொண்டிருந்தபோது, அந்தப் பெண் பலத்த நீரோட்டத்தில் சிக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவ்வேளை குறித்த கடற்கரை பகுதியில் பணியில் இருந்த பொலிஸ் உயிர்காக்கும் குழுவினரால் அவர் மீட்கப்பட்டார்.
மீட்கப்பட்ட பெண் 28 வயது ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்தவர்.
