கல்கிசை கடலில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவர்கள் மீட்பு
கல்கிசை கடற்கரையில் கடலில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் நேற்று (17) இடம்பெற்றுள்ளது.பொலிஸ் உயிர்காக்கும் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், பலத்த நீரோட்டத்தில் சிக்கிய சிறுவர்களை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு முதலுதவியும் வழங்கப்பட்டுள்து.
அவர்கள் 16 வயதுடையவர்கள் எனவும் வெல்லம்பிட்டி, கட்டுகுருந்த மற்றும் ஹோகந்தர ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
