சுவிஸ் சுரங்கப்பாதையில் 46 தடவைகள் முந்திச் சென்ற இருவர் : வாழ்நாளில் வாகனம் ஓட்ட தடை

சுவிட்சர்லாந்து கோட்ஹார்ட் பிரதான சுரங்கப்பாதையில், முந்திச் செல்லும் தடையை மீறி, இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மொத்தம் 46 முந்திச் சென்ற நிலையில் , இவர்கள் வாழ்நாள் முழுவதும் சுவிட்சர்லாந்தில் வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

17 கிலோமீற்றர் (16.942) நீளமான சுரங்கப்பாதையில் பல வாகனங்களை முந்திச் சென்றுள்ள நிலையில் இறுதியில் இருவரும் யூரி மாநில பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இரு ஓட்டுநர்களும் சுவிட்சர்லாந்தில் வாகனம் ஓட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டனர்.

முந்திச் செல்லும் தடையை மீறி கோட்ஹார்ட் சுரங்கப்பாதையில் பல முந்திச் சென்றுள்ள நிலையில் இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் குறித்து கூட்டு எச்சரிக்கை மையத்திற்கு தகவல் கிடைத்ததாக மாநில பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் 30 வயது பிரிட்டிஷ் குடிமகனும், பிரான்சில் வசிக்கும் 25 வயது இத்தாலிய குடிமகனுமான இருவருக்குமே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சுரங்கப்பாதையில் வீடியோ கேமராக்களின் பகுப்பாய்வில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சுரங்கப்பாதையில் மொத்தம் 46 முறை முந்திச் சென்றுள்ளனர். இதில் 3 தரம் லொரிகளையும் 43 தரம் இலகுரக வாகனங்களையும் முந்திச் சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

30 வயது மற்றும் 25 வயதுடைய இருவரும் மத்திய சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கடுமையான மீறல்களுக்காக போக்குவரத்துக் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு, சுவிட்சர்லாந்தில் வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டது.