
சக்தி வாய்ந்த கடவுச்சீட்டைக் கொண்ட நாடாக சிங்கப்பூர்
“தி ஹென்லி”, யின் புதுப்பிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த தரவரிசை பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது.
இதன்படி உலகின் மிகவும் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டைக் கொண்ட நாடாக சிங்கப்பூர் பதிவாகியுள்ளது.
அத்துடன் தென் கொரியா இரண்டாவது இடத்தையும், ஜப்பான் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
இந்தநிலையில் இலங்கையின் கடவுச்சீட்டு 97வது இடத்தில் தரப்படுத்தப்பாட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
