கடவத்தை – மீரிகம அதிவேக வீதியின் கட்டுமானம் இன்று ஆரம்பம்
மத்திய அதிவேக வீதியின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான கட்டுமானப் பணிகள் இன்று (17) உத்தியோகப்பூர்வமாக மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது .
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கட்டுமானப் பணிகள்
ஆரம்பிக்கப்படுகின்றன.
இதன்போது, கடவத்தை மற்றும் அதிவேக வீதியின் முதல் 500 மீற்றர் பகுதியின் கட்டுமானப் பணிகளும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்காக அரசாங்கம் 8.6 பில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த வீதிக்கு ஒதுக்கப்பட்ட கடன் வசதிகள் நிறுத்தப்பட்டதால், இந்தப் பகுதியின் கட்டுமானம் 2022 நடுப்பகுதியில் நிறுத்தப்பட்டது.
கட்டுமானத்தை மீண்டும் தொடங்க சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியால் 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கு இணையான யுவான் கடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் 2028 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் முழுமையாக நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.மத்திய அதிவேக வீதியின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான தூரம் 37 கிலோமீற்றர் ஆகும்.
