இலங்கை போக்குவரத்து சபையில் பெண் சாரதிகள், நடத்துநர்கள் உள்வாங்கப்படுவார்கள் -அமைச்சர்
எதிர்காலத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு பெண் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (16) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கை போக்குவரத்து சபையின் 25 டிப்போக்களை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது கூறினார்.
தற்போது இலங்கை போக்குவரத்து சபையில் நிலவும் ஊழியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 750 புதிய சாரதிகளையும், நடத்துநர்களையும் ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார் .
இதேநேரம் இலங்கை போக்குவரத்து சபை மீண்டும் கட்டமைக்கப்பட்டு இலாபகரமான நிறுவனமாக மாற்றப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
