இன்று மழையுடன் கூடிய காலநிலை நிலவும்

வடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், குருநாகல், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று  பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது .

சில இடங்களில் 75 மில்லிமீற்றர்  வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

மேல்  மாகாணத்திலும், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் .பலத்த காற்று ,மின்னல் ஏற்படக்கூடிய  பாதிப்புகளை  குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.