பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்திய தீவுகள்

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இதன்போது 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் குறித்த இரு அணிகளும் மோதவுள்ளன.

இதன்படி ஒருநாள் தொடரை டாக்காவிலும், டி20 போட்டிகளை ட்டோகிராமிலும் நடத்த பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஒக்டோபர் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.