முத்து நகர் விவசாய நிலத்துக்கு சஜீத் பிரேமதாச விஜயம்
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை முத்து நகர் மக்களின் விவசாய காணிகளை சூரிய மின் சக்தி உற்பத்திக்காக இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப் பட்டதால் ஏற்பட்ட அசாதாரன நிலமையை நேரில் சென்று எதிர்க் கட்சி தலைவர் சஜீத் பிரேமதாச இன்று செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களோடு கலந்துரையாடினர்.
பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தலைமையில் திடீர் களவிஜயம் மேற்கொண்ட எதிர் கட்சி தலைவர் காணி அபகரிப்பு தொடர்பிலும் விவசாயிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.
இதில் கிண்ணியா மற்றும் தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

