‘மறுமலர்ச்சி நகரம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் உள்ளூராட்சி வாரம் நிகழ்வு
பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களையும் மையமாகக் கொண்டு 2025 செப்டெம்பர் 15 – 21ஆந் திகதி வரை ‘மறுமலர்ச்சி நகரம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் உள்ளூராட்சி வாரம் இன்று திங்கட்கிழமை கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையில் தவிசாளர் எம்.எச்.எம்.பைரூஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கந்தசாமி பிரபு , கிழக்கு மாகாண கௌரவ ஆளுநரரின் இணைப்புச் செயலாளர் உமர் கத்தாப் அப்துல்லாஹ் மற்றும் சபையின் உப தவிசாளர் ஏ.எச்.நுபைர், பிரதேச சபை உறுப்பினர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கலந்து கொண்டனர் .





