நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கலேவெல, தேவஹுவ நீர்த்தேக்கத்தில் மூழ்கி 11 வயது சிறுவர் உயிரிழந்துள்ளார்.

சிறுவன் அவரது தந்தை மற்றும் உறவினர்களுடன் நீர்த்தேக்கத்தில் நீராட சென்றபோதே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன சிறுவனை உறவினர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் மீட்டு கலேவெல வைத்தியசாலையில் அனுமதித்தனர். இருப்பினும் சிறுவர் உயிரிழந்துள்ளார்.

கலேவெல தேவஹுவ பகுதியில் வசிக்கும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.