இலஞ்ச,ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் பின்வாங்கப் போவதில்லை – சமந்த வித்தியாரத்ன
அரசாங்கத்துக்குள் இலஞ்ச,ஊழல் மோசடிகள் இடம்பெற்றாலும் அவற்றுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதில் பின்வாங்கப் போவதில்லை என அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார்.
கொள்கலன் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் யார் தவறிழைத்திருந்தாலும் அவர்கள் அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சட்டம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் குறுகிய காலத்துக்குள் போதைப்பொருள் ஆக்கிரமிப்பிலிருந்து நாட்டை விடுவிப்பதாகவும் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
