வரி விதிப்பால் போருக்குத் தீர்வு காண முடியாது : ட்ரம்புக்கு சீனா பதில்
வரி விதிப்பதாலோ அல்லது பொருளாதாரத் தடை விதிப்பதாலோ போருக்குத் தீர்வு காண முடியாது என ட்ரம்புக்கு சீனா பதிலளித்துள்ளது. அவை பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும் எனவும் சீனா சுட்டிக்காட்டியுள்ளது.
ரஷ்யா மற்றும் யுக்ரைன் இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், போர் முடியும் வரை சீனா மீது 50 முதல் 100% வரிகள் விதிப்பது உள்ளிட்ட ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் விரிவான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ‘நேட்டோ’ நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், வரியால் போர் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. வரி விதிப்பதும் பொருளாதாரத் தடை விதிப்பதும் நிலைமையை மேலும் சிக்கலாக்கும் என சீனா அறிவித்துள்ளது.
போர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்க சீனா உறுதிபூண்டுள்ளதாகவும், தாம் போர்களில் பங்கேற்கத் திட்டமிடவில்லை என்றும் சீனா அறிவித்துள்ளது.
மேலும், அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது.
சீனாவும், ஐரோப்பாவும் போட்டியாளர்களாக இருக்காமல், நண்பர்களாக இருக்க வேண்டும் எனவும் சீனா அறிவித்துள்ளது.
