டிப்பர் வாகன சாரதிகளின் கவனயீர்ப்புப் போராட்டம்
டீசலுக்கு பதிலாக மண்ணண்ணெய் பயன்படுத்தி ஓடும் டிப்பர் வாகனங்கள் டீசலுக்கு மாறுவதற்கு ஒருவாரம் அவகாசம் தருமாறு கோரியும் மண்ணண்ணெய் பயன்படுத்தும் அனைத்தும் வாகனங்களையும் பொலிசார் கண்டறிய வலியுறுத்தி டிப்பர் வாகன சாரதிகள் A9வீதி கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகாமையில் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
இதன் போது பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து டிப்பர் சாரதிகளுடன் கலந்துரையாடியதைத்தொடர்ந்து ஒரு வாரகால அவகாசத்திற்கு சம்மதம் தெரிவித்ததைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
