நானுஓயாவில் நடனமாடிய வெளிநாட்டவர்கள்
நானுஓயா புகையிரத நிலையத்தில் இந்திய சுற்றுலா பயணிகள் நேற்று சனிக்கிழமை பாடல்களை பாடி அதற்கேற்ப உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர் .
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற 11001 என்ற சிறப்பு ரயில் நேர தாமதமாக சென்றதால் ரயில் நிலையத்தில் இருந்த இந்திய சுற்றுலாப் பயணிகள் ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். பின்னர் சலித்துக்கொள்ளாமல் நடனமாடி அந்தப் பொழுதை மகிழ்ச்சியுடன் போக்கினர்.
