சோளம் பயிரிடும் விவசாயிகளை பதிவு செய்ய நடவடிக்கை
2025/26 பெரும் போகத்தில் சோளம் பயிரிடும் விவசாயிகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ளது.
www.agrarian.lk மற்றும் www.agrariandept.gov.lk ஆகிய இணையத்தளங்களில் இதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோளம் பயிரிடும் அனைத்து விவசாயிகளும் இந்த அமைப்பில் பதிவு செய்ய வேண்டும் என கமநல அபிவிருத்தி திணைக்களம்
தெரிவித்துள்ளது .
அது தொடர்பில் அனைத்து விவசாயிகளுக்கும் அறிவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பதிவு செய்வது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கமநல அபிவிருத்தி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
