விஜய்க்கு போட்டியாக சிவகார்த்திகேயன்

விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படமும் , சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ திரைப்படமும் அடுத்த வருடம் பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளதாக திரைவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவரும் ‘பராசக்தி’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

டேன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இந்த திரைப்படம் எதிர்வரும் பொங்கல் விடுமுறைக்கு வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்தநிலையில், மறுபுறம் தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ திரைப்படமும் அடுத்தவருடம் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் பந்தயத்தில் ஜனநாயகனும் பராசக்தியும் மோதி கொள்ளும் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.