
நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுஷிலா கார்க்கி நியமனம்
நேபாளத்தின் இடைக்கால பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று வெள்ளிக்கிழமை இடைக்கால நிர்வாகத்தின் தலைவராக அவர் பதவியேற்க உள்ளதாக நேபாள ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டின் ஜெனரல் இசட் எதிர்ப்பாளர்களுக்கும் ஜனாதிபதிக்கும் உயர் இராணுவ அதிகாரிக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்ட பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டதன் மூலம், அவர் நேபாளத்தின் முதல் பெண் பிரதமராகவும் வரலாற்றில் இடம் பெறுவார் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவரது தலைமையில் ஒரு சிறிய அமைச்சரவை நியமிக்கப்பட உள்ளது. முதல் கூட்டம் இன்றிரவு நடைபெறும், மேலும் மத்திய நாடாளுமன்றத்தையும் ஏழு மாகாண நாடாளுமன்றங்களையும் கலைக்க அமைச்சரவை பரிந்துரைக்கும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, எதிர்வரும் தேர்தல்கள் வரை முன்னாள் தலைமை நீதிபதி இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக பணியாற்றுவார் என்றும தெரிவிக்கப்பட்டுள்ளது.
