
பஞ்சாப்பில் படகு கவிழ்ந்து 10 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மீட்புப் பணியின்போது மூன்று படகுகள் கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாகாணத்தின் தெற்கு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் நகரங்களிலிருந்து சுமார் 16,000-க்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் மாகாணத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தெற்கு பஞ்சாப்பில் நூற்றுக்கணக்கான கிராமங்களை வெள்ளம் மூழ்கடித்ததால், மக்கள் பலர் வெளியேறி வருகின்றனர்.
இதுகுறித்து அவசர சேவைகள் மீட்பு அதிகாரிகள் தெரிவிக்கையில் ,
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியின்போது முல்தான் மற்றும் பஹாவல்நகர் அருகே மூன்று படகுகள் கவிழ்ந்தன.
படகில் பயணித்தவர்களில்குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 பேர் மீட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
