வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேச்சரத்தில் புதிய தேர் இருப்பிட கட்டுமானப் பணிக்காக அடிக்கல் நாட்டல்!

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுேலேச்சரப் பெருமான் தேவஸ்தானத்தில் புதிய தேர் இருப்பிட கட்டுமானப் பணிக்காக இன்றையதினம் அடிக்கல் நாட்டப்பட்டது.

41 அடி உயரம் கொண்ட பூசாந்திர சித்திரத் தேருக்கான புதிய தேர் இருப்பிடத்தின் கட்டுமான வேலைகளுக்காகவே இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிமுதல் 10 மணிவரை உள்ள சுபமுகூர்த்ததில் இவ்வாறு அடிக்கல் நாட்டப்பட்டது.

இதன்போது விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.