யாழ் இணுவில் பகுதியில் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் வைத்து ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடமிருந்து 110 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சுன்னாகம் பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.