ICC மகளிர் உலகக் கிண்ணம் 2025 – இலங்கை அணி அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணப்போட்டி 2025க்கான இலங்கை மகளிர் அணி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

15 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு தெரிவு செய்துள்ளது.

குவஹாத்தியில் நடைபெறும் ஆரம்ப போட்டியில்; இலங்கை அணி இந்தியாவை எதிர்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளிருக்கான உலகக் கிண்ணப்போட்டி செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 2ஆம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது.

மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணப்போட்டியின் தலைவராக சாமரி அத்தபத்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும், துணைத்தலைவராக அனுஷ்கா சஞ்சீவனி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த குழுவில், ஹாசினி பெரேரா, விஷ்மி குணரத்னே,ஹர்ஷித சமரவிக்ரம, கவிஷா தில்ஹாரி, நிலாக்ஷி டி சில்வா, இமேஷா துலானி, தேவ்மி விஹங்கா, பியூமி வத்சலா, இனோகா ரணவீர, சுகந்திகா குமாரி, உதேசிகா பிரபோதனி, மல்கி மதரா, அச்சினி குலசூரிய ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.