மஹிந்த ராஜபக்ஷவுடன் அரசியல்வாதிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பு விஜேராம வீதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று வியாழக்கிழமை காலை அரசியல் பரப்பில் உள்ளவர்கள் சென்று சந்தித்தனர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் வசித்த உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு இன்று வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டமூலம் நேற்று பாராளுமன்றத்தில் திருத்தங்கள் இல்லாமல் நிறைவேற்றப்பட்டதை அடுத்து முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் கையளிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.