கொஹூவல விபத்து – பாதசாரி உயிரிழப்பு
கொஹூவல சரணங்கர வீதியில் நேற்று (10) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரியொருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி, களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் வெள்ளவத்தை, கோகிலா வீதியைச் சேர்ந்த 59 வயதானவர்
என தெரிய வந்துள்ளது.
சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் கொஹூவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
