மாணவர்களை பாடசாலைக்கு இணைத்துக் கொள்வதற்கான சுற்றுநிருபம் வெளியானது
பாடசாலைகளின் தரம் 2 முதல் தரம் 11 வரை மாணவர்களை அனுமதிப்பதற்காக (தரம் 5 மற்றும் தரம் 6 தவிர்த்து) தயாரிக்கப்பட்ட 27/2025 சுற்றுநிருபம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சினால் குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சுற்றுநிருபத்தை www.moe.gov.lk இணையத்தளத்தினுள் பிரவேசிப்பதனூடாக பெற்றுக் கொள்ள முடியும்.
