வாகன விபத்தில் சிறுவன் மரணம்
மாவத்தகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்டி – குருணாகல் பிரதான வீதியில் 6 வது மைல் கல்லுக்கருகில் வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்துநேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
கண்டி நோக்கி பயணித்த வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் வேனில் பயணித்த சாரதி உட்பட இரு ஆண்கள், இரு பெண்கள், ஒரு சிறுவன் என ஐந்து பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் படுகாயமடைந்த சிறுவன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
11 வயதுடைய மாவத்தகம பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும், மாவத்தகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நால்வரும் மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் மாவத்தகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
