ஓட்டமாவடியில் சமையல் எரிவாயு கசிவினால் பெண்ணொருவர் மரணம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி 1 அரபா வீதி பகுதியில் சமையல் எரிவாயு கசிவு சம்பவத்தில் பெண்ணொருவர் புதன்கிழமை மரணமடைந்துள்ளார்.

உயிரிழந்த பெண் அதே பகுதியை சேர்ந்த 51 வயதுடையவர் ஆவார்.

இவர், கடந்த வியாழக்கிழமை தேனீர் தயாரிப்பதற்காக எரிவாயுவை பயன்படுத்திய போது அதன் வயர் வெடித்து இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் எரிகாயங்களடைந்த பெண் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.