நீதித்துறையில் பெரிய மாற்றம் – 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இடமாற்றம்

வருகின்ற திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் மொத்தம் 106 நீதித்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என நீதித்துறை சேவை ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த இடமாற்றத்தில் மாவட்ட நீதிபதிகள், நீதவான்கள் மற்றும் நீதிமன்ற பதிவாளர்கள் அடங்குவர்.

இடமாற்றம் செய்யப்பட்ட நீதவான்களில் மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம வீரசிங்க, மஹர நீதவான் எச்.ஜி.ஜே.ஆர். பெரேரா, குருநாகல் நீதவான் என்.டி.பி. குணரத்ன, காலி நீதவான் ஐ.என்.என். குமாரகே மற்றும் பலபிட்டிய நீதவான் ஆர்.டி.ஜனக ஆகியோர் அடங்குவர்.