பெருங்குடல் புற்றுநோய்க்கு மருந்து தயார் – ரஷ்யா

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும்உயிரியல் முகவரக அமைப்பு அறிவித்துள்ளது.

ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியின் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக அண்மையில் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அறிவித்திருந்தார்.

பல ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சியின் முடிவுகள் கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவ பரிசோதனையில் இருந்தது. தற்போது இந்த ஊசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளது. விரைவில் அரசின் ஒப்புதலுக்கு பின்னர் பயன்பாட்டுக்கு வரும்என ரஷ்ய மத்திய மருந்து மற்றும்உயிரியல் முகவரக அமைப்பின் தலைவர் வெர்னிகோ கோவோர்ட்சோவா தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. புற்றுநோய்க்கு எதிராக வேலை செய்கிறது. நோயின் முக்கியத்துவத்தை பொறுத்து, புற்றுநோய் கட்டியின் அளவு விரைவில் குறைவதுடன் குணமடையும் வேகமும் 60 முதல் 80 சதவீதம் அதிகரிக்கும்.மேலும் பல புற்றுநோய்களுக்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது
எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.