இ.போ.ச ஊழியர்கள் மீது தாக்குதல்
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரு பஸ்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எசல பெரஹெரவுக்காக விசேட போக்குவரத்து சேவைகளுக்குப் பயன்படும் பஸ்கள் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகக் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தின் போது இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் இருவரும் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த இரு ஊழியர்களும் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று இரவு 11.30 இற்கு 12 மணிக்கும் இடையில் இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
மஹியங்கனை பஸ் நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் பேருந்தின் யன்னல்கள் சேதமடைந்துள்ளதுடன் சுமார் 2இலட்ச ரூபாய் வரை சேதம் ஏற்பட்டுள்ளதாக உடதும்பர டிப்போ முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார் .
பஸ் நிலையத்துக்குள் மோட்டார் சைக்கிளை பிரவேசிக்க அனுமதிக்கவில்லை என தெரிவித்து நபரொருவர் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அறியமுடிகிறது. தாக்குதலைத் தடுக்க வந்த மற்றுமொரு நபரையும் குறித்த நபர் தாக்கியுள்ளார்.
மஹியங்கனை, தொடம்வத்த பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகக் பொலிஸார் தெரிவிக்கின்றனர் .